search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் திணறல்"

    • கடையில் இருந்த துணிகளை தனக்கு ஏற்றவாறு ஒவ்வொன்றாக தேர்வு செய்து எடுத்து அதனையும் திருடிக் கொண்டு அதே சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.
    • அடுத்த நாள் அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி நகரின் மத்தியில் அமைந்துள்ள ஒரு ஜவுளி கடையில் கடந்த வாரம் நள்ளிரவில் புகுந்த ஒரு வாலிபர் கல்லாவில் இருந்த ரூ.1.30 லட்சத்தை திருடினார்.

    மேலும் கடையில் இருந்த துணிகளை தனக்கு ஏற்றவாறு ஒவ்வொன்றாக தேர்வு செய்து எடுத்து அதனையும் திருடிக் கொண்டு அதே சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இது குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் பதிவான நிலையில் அதனை வைத்து போடி போலீஸ் நிலையத்தில் கடையின் உரிமையாளர் புகார் அளித்தார்.

    இதற்கு அடுத்த நாள் அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர். இந்த கொள்ளை வழக்கிலும் முகமூடி அணிந்த 3 பேர் ஈடுபட்டது சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். கொள்ளை நடந்து ஒரு வாரம் ஆகியும் சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் உருவம் கேமராவில் பதிவான போதிலும் இன்னும் போலீ சாரால் குற்றவாளியை கண்டு பிடிக்க முடி யவில்லை.

    ெதாடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் போடியில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த அச்சம் அடைந்து னர்.


    • கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததாலும் கொள்ளையர்களை கைது செய்ய முடியவில்லை.
    • கள்ளக்குறிச்சியில் தற்போது ஒரு திருட்டு வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பாலூர், திருவதிகை, ராசாபாளை யம், எல்.என்.புரம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட் டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை போனது. இது தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஆனால் போலீசாரால் இதுவரை கொள்ளையர்களை கைது செய்ய முடியவில்லை. கொள்ளை நடந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படா ததாலும் என்.எல்.சி. போராட்டம், பஸ்கள் கண்ணாடி உடைப்பு மேலும் போதிய அளவு போலீசார் இல்லாதது போன்ற காரணங்களாலும் இந்த கொள்ளை வழக்கில் துப்பு துலுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் தற்போது ஒரு திருட்டு வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர்களில் ஒருவனுக்கு பண்ருட்டி கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளது என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பண்ருட்டி டி.எஸ்.பியின் தனிப்படை யினர் கள்ளக்குறிச்சியில் கைது செய்யப்பட்ட ஒரு வனை சந்தேகத்தின் அடிப்படையில் காவலில் எடுத்து விசாரிக்க நட வடிக்கை எடுத்து வருகின்ற னர். இதில் துப்பு துலங்கி னால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீ சார் தெரிவித்தனர்.

    • திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள பழைய லாரி பேட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர் அடித்து படுகொலை செய்யப்பட்டார்.
    • இதுவரை குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள பழைய லாரி பேட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர் அடித்து படுகொலை செய்யப்பட்டார். அவர் குடிபோதையில் அடித்து கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் யார்? எந்த ஊர் என விசாரித்து வந்த நிலையில் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கொத்தப்புள்ளியை சேர்ந்த கார்த்திக்குமார்(25) என தெரியவந்தது.

    டிரம்ஸ்செட் கலைஞராக வேலை பார்த்து வந்த இவருக்கும், திண்டுக்கல் லயன்தெருவை சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் ஆனந்தி கோவித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

    மேலும் இவர் செல்போனில் பல ஆண்களுடன் பேசி வந்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு கார்த்திக்குமார் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இதுவரை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த கொலை வழக்குகுறித்து டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் நகர்மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

    ×